Wednesday, October 13, 2010

உனக்கும் எனக்கும் பொதுவானவை

உனக்கும் எனக்கும் பொதுவானவை மெளனம்
இருப்பினும்
நீ மெளனித்த வேளைகள்
என்னை கலவரப்படுத்துகிறது
நான் மெளனித்த வேளைகள்
உன்னை சந்தேகிக்கவைக்கிறது

எண்ணற்ற வார்த்தைகள்
நிறைவு செய்வதாக
நம்பி கொண்டிருக்கிறோம் இருவருமே
வார்த்தைகள் சேர சேர
உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும்
செல்கிறோம்
வெகுதூரத்துக்கு அப்பால்

கடக்கவியால தூரங்கள்
எதிர்பாரா திருப்பத்தில்
முடிவடைவதை போன்ற
மெளனத்தில் வாழ்கிறது
நமக்கானவை அனைத்தும்

No comments:

Post a Comment