Friday, June 10, 2011

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - A Meaningful Song



நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்

உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்


ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

உடல் உழைக்க சொல்வேன்

அதில் பிழைக்க சொல்வேன்

அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்

உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்


சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்

ஒரு மானம் இல்லை அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்


ஒரு காலம் வரும் என் கடமை வரும்

இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்

பொது நீதியிலே புது பாதையிலே

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்

உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்


இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்

நானா பார்த்திருப்பேன்

ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு

அதை எப்போதும் காத்திருப்பேன்


முன்பு இயேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்

இந்த மானிடர் திருந்திட பிறந்தார்

இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை

அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

அன்டக் மேலோர் சொன்னதை மறந்தார்


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்

உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்

No comments:

Post a Comment